1.3 பக்க அமைப்பில் உத்திகளும் பயன்களும்

படிப்பவர் மனத்தை ஈர்க்கும் வகையில் பல உத்திகள்
பயன்படுத்தப்படுகின்றன. அதைப்போல, பக்க அமைப்பின்
தன்மைகளைப் பொறுத்துப் பல நன்மைகளும் விளைகின்றன.

(1) பலவகை அளவான எழுத்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
(2) பலவகையான தலைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
(3) செய்திகள் கலந்துவிடாமல் இருக்க இடைவெளிகள்
இடப்படுகின்றன.
(4) பத்திகளைப் பிரித்துக் காட்ட இடைவெளி அல்லது
கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன.
(5) பலவகைப் பத்தி அமைப்புமுறை.
(6) செய்திகளையும், விளம்பரங்களையும் கோடிட்டுப்
பிரித்தல்.
(7) செய்தி முடிவைக் காட்டக் கோடிடல்.
(8) கட்டம் கட்டிச் சில செய்திகள், துணுக்குகள்,
விளம்பரங்கள் இவற்றை வெளியிடுதல்.
(9) நிழற்படங்களையும் வண்ணப்படங்களாகவே அமைத்தல்
அல்லது கறுப்பு வெள்ளையில் தருதல்.

என்று இவ்வாறு     பல     வகையான     உத்திகள்
கையாளப்படுகின்றன.

முதல்பக்க அமைப்பில் கையாளப்படும் உத்திகள்

(1) மிகப்பெரிய எழுத்துகள் (அதிகப் புள்ளி அளவுடையவை)
முதல் பக்கத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
(2) பலவகைத் தலைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
(3) மிகப்பெரிய விளம்பரம் முதல் பக்கத்தில் வராது.
(இடத்தை அடைத்துக் கொள்ளும் என்பதால்)
(4) பலவகைப் பத்தி அமைப்பு முறையும் கையாளப்படும்.
(5) பொதுவாகச் செய்திகள் முடிவுபெறாமல் தொடர்ச்சி
வேறு பக்கத்தில் தொடர்வதாக இருக்கும்.
(6) நிழற்படம் இடம்பெறும்.
(7) செய்தித்தாளை மடித்து வைக்கும் போது ஏதாவதொரு
தலைப்பு கண்ணில் படுமாறு முதல் பக்க அமைப்பு
இருக்கும்.
(8) முதல் பக்க அமைப்பிலேயே நாளேட்டின் சார்புத்
தன்மையைப் புரிந்து கொள்ளவும் முடியும்.

பக்க அமைப்பின் காரணமாக வெளியீட்டாளர்கள்
இதழ்களை அன்றாட நிகழ்வாக எளிதில் வெளியிட முடிகிறது.
உள்ளடக்கங்களை அவற்றிற்குரிய இடங்களில் பதித்தல்
அத்துடன் அன்றாடச் செய்திகளைச் சேர்த்தல் என்பது
நடைமுறைக்கு எளிமையாக இருக்கும். அத்துடன் படிப்பவர்
நலன்களும் கருத்தில் கொள்ளப்படுகின்றன. அவை :

(1) படிப்பவரின் கவனத்தை ஈர்க்கப் பக்க அமைப்பு
பயன்படுகிறது.
(2) செய்தியின் முதன்மையைப் படிப்பவர்கள் அறிய
முடிகிறது.
(3) முதலில் எந்தப் பகுதியைப் படிப்பது என்பதில்
குழப்பமில்லாமல் இருக்க வழிகாட்டுகிறது.
(4) செய்தித்தாளின் தனித்தன்மையை அறிய உதவுகிறது.

மேற்கூறியவை அனைத்திற்கும்     மலோக இதழ்களின்
விற்பனையைப்     பெருக்குவதற்கும்     படிப்பவர்களின்
எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் பக்க அமைப்பு (Page
make up) உதவுகிறது.