1.4 தொகுப்புரை

இதுவரை பக்க அமைப்பு என்றால் என்ன? பக்க
அமைப்பில் உள்ளடக்கங்கள் எவை? முதல்பக்க அமைப்பு,
பக்க அமைப்பு வகைகள் பற்றிய விளக்கம், பக்க அமைப்பில்
கவனிக்க வேண்டியவை, பக்க அமைப்பில் பயன்படும்
உத்திகள், பக்க அமைப்பின் பயன்கள் இவை பற்றிய
விளக்கங்களைக் கண்டோம். பக்க அமைப்பு என்பது ஒரு
இதழின் கட்டமைப்பாக (Structure) இருக்க, இனி
இத்தகைய அமைப்பிற்குள் வரும் உள்ளடக்கங்கள் (contents)
பற்றி அடுத்து வரும் பாடங்களில் காணலாம்.



தன் மதிப்பீடு : வினாக்கள் II

1.
பக்க அமைப்பில் கவனிக்க வேண்டியவை யாவை?
2.
முதல்பக்கத்தில் தொடங்கிய செய்தி, ஒதுக்கப்பட்ட
இடத்திற்குள் முடியவில்லை என்றால் இதழ்கள்
எப்படிச் சமாளிக்கின்றன?
3.
செய்தித்தாளில் பொதுவாக எத்தனை பத்திகள்
இடம்பெறுகின்றன?
4.
எழுத்து அளவை எந்த அளவுப் பெயர் கொண்டு
அழைப்பார்கள்?
5.
செய்தித்தாள்களில் படங்கள் எதற்காகப் பயன்படுத்தப்
படுகின்றன?
6.
பக்க அமைப்பில் கையாளப்படும் உத்திகள் யாவை?