2.0 பாட முன்னுரை

இதழ்கள்தாம் மக்களை மிகுதியாகக் கவர்கின்ற ஊடகமாக
அமைகின்றன. எனவே அவ்விதழ்களின் அமைப்பு அதாவது
வடிவம், அளவு,     பக்கம்     முதலியனவும் அறிவது
அவசியமாகிறது. மேலும் அவ்விதழ்களின் உள்ளடக்கம்
அதாவது அன்றாட நிகழ்வுகள், தலையங்கம், விமர்சனம்
முதலியன அமையும் முறை, தொடக்கம் (Lead), தலைப்பு
(Heading) இவை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதும்
அறியப்படுகிறது.     மேலும்     தலைப்புகளின் வகைகள்,
தலைப்புகளின் தனித்தன்மைகளினால் விளையும் பயன்
முதலியன நாளிதழ்களின் உள்ளடக்கமாக அறியப்படுகின்றன.

மிகுமக்கள் இதழ்களின்     அமைப்பு, உள்ளடக்கம்,
சிற்றிதழ்களின் அமைப்பு, உள்ளடக்கம் முதலியனவும்
இப்பகுதியில் விளக்கப்பட்டுள்ளன.