3.0 பாட முன்னுரை

தலையங்கம் என்பது இதழ்களில் முக்கியப் பகுதியாக
அமைகிறது. மிக முக்கியக் கருத்துகளும் அன்றைய
அப்போதைய தேவை குறித்த செய்திகளும் தலையங்கமாக
அமைவதுண்டு.

சிற்றிதழ், வெகுசன இதழ், நாளேடு ஆகிய மூன்று
வகை இதழ்களிலும் தலையங்கம் இடம்பெறுவதுண்டு.

மனிதனுக்கு இதயம் போன்று இதழுக்குத் தலையங்கம்
அமைகிறது.