பாடம் 1

P20441 - அச்சுப்படி திருத்தமும்
குறியீடுகளும்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    அச்சுப் படிகளில் உள்ள பிழைகளைத் திருத்துவதற்குப்
பத்திரிகைகளில் தனியாக ஊழியர்கள் உள்ளனர். அவர்கள்
செய்ய வேண்டிய பணிகள், அச்சுப்படி திருத்தும் முறைகள்,
அதற்கான குறியீடுகள் பற்றி இந்தப் பாடம் விளக்கியுள்ளது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால்
என்ன பயன் பெறலாம்?

    இதனைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும்
திறன்களையும் பயன்களையும் பெறலாம்.

ஓர் அச்சுப்படியை எவ்வாறு திருத்த வேண்டும், அதன்
முக்கியத்துவம் யாது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

அச்சுப்படி திருத்தப்     புகுவோர் பெறவேண்டிய
ஆலோசனைகள், அந்த ஆலோசனைகளால் அவர்
பெறும் பயன்பாடு பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
அச்சுப்படி திருத்தும்போது குறியீடுகளை எவ்வாறு
பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறியலாம்.
அச்சுப்படி திருத்தக் குறியீடுகளைப் பயன்படுத்துவதால்
பிழையின்றித் தரமாகச் செய்திகள் வெளிவர அவை
உதவுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.