• |
பாபிலோனியா, சீனாவில் அச்சுக்கலை வளர்ந்த விதத்தை அறியலாம். |
• |
அச்சடித்தல் தொடக்கக் காலத்திலிருந்து பல்வேறு படிநிலைகளில் வளர்ந்து இன்றுள்ள நிலையை அடைந்துள்ளதைப் புரிந்து கொள்ளலாம். |
• |
கோவா, தரங்கம்பாடி ஆகிய இரு இடங்களிலும் அச்சுக் கூடங்கள் நிறுவி ஆங்கிலேயர்கள் அச்சுக்கலை வளர உதவிய நிலையை அறியலாம். |
• |
கையால் அச்சுக் கோப்பது, அச்சுப்பொறியின் மூலம் அச்சுக் கோத்தல் போன்ற முறைகளில் எவ்வாறு அச்சடிப்பது என்பதைப் புரிந்துகொள்ளலாம். |
• |
அச்சடிக்கும் இயந்திரங்களான காலால் மிதித்து அச்சடிக்கும் இயந்திரம், உருளை அச்சு இயந்திரம், சுழல் அச்சுப்பொறி இயந்திரம், ஆப்செட் அச்சடிக்கும் இயந்திரம் ஆகியன இயங்கும் விதம் பற்றி அறியலாம். |
• |
டெலி டைப் செட்டர், டெலக்ஸ், போட்டோ டைப் செட்டிங், கணினி அச்சு அமைப்பு போன்றவை இயங்கும் விதம் பற்றித் தெரிந்து கொள்ளலாம். |
• |
அச்சிடுவதற்குப் பயன்படும் புள்ளி வகைகள் பற்றியும் இப்பாடத்தில் படித்துப் புரிந்துகொள்ளலாம். |