|
வேலியும் காவலும் |
  |
|
வேலிக்குப் பயிர்கள் மேலே
வெறுப்புத்தான் இருக்கும் என்றால் -
வேலி ஏன்? காவல் ஏனோ?
காவலோ வேலியாலே? |
| - கவிஞர்
முருகையன் |
|
உயிர்ப்பு |
  |
|
அன்புள்ள நண்பனே
ஜூலியஸ் ஃபூசிக்,
சிறைக்குறிப்புகள் எழுதவும்
எனக்கு விரல்களில்லை
நீ கடந்த காலத்திற்குரியவன்
நானோ இன்றைய நிகழ்வின் நாயகன். |
|
- கவிஞர் உ.சேரன்
|
|
|