முதல் பருவம்

நிலை - 1

1.5 பாடி மகிழ்வோம்

பாடம் - 1

அணில் பாடல்

அணில்! அணில்!

அணில்! அணில்! ஓடுது!
ஆடிப் பாடி ஓடுது!
இனிய பழம் தேடுது!
ஈச்ச மரத்தைப் பார்க்குது!
உச்சி மேலே ஏறுது!
ஊஞ்சல் போல ஆடுது!