முதல் பருவம்

நிலை - 1

1.6 கேட்டல் கருத்தறிதல்

பாடம் - 1

இனியாவின் பிறந்தநாள் விழா

இனியாவின் பிறந்தநாள் விழா

இனியாவுக்குப் பிறந்தநாள். பெற்றோர் சிறப்பாகக் கொண்டாட விரும்பினர். மகளின் விருப்பத்தைக் கேட்டனர். அவள், நண்பர்களுடன் கொண்டாடலாம் என்றாள். பெற்றோர் ஏற்றுக் கொண்டனர். இனியா தன் நண்பர்களை வீட்டிற்கு அழைத்தாள். இனியாவின் பிறந்தநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடினர். அனைவரும் விருந்து உண்டனர். பின்னர், அருகிலுள்ள கடற்கரைக்குச் சென்றனர். மாலை வீடு திரும்பினர். இனியாவுக்கு அந்த நாள் இனிய நாளாக அமைந்தது.