முதல் பருவம்

நிலை - 1

1.5.1 பாடி மகிழ்வோம்

பாடம் - 1

ஔவையார்

ஆத்திசூடி

அறம் செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்

- ஔவையார்