அப்பா : | உணவுத் திருவிழா நடக்கிறதே, போலாமா? |
அம்மா : | அப்படியா? எங்கே நடக்குது? |
அப்பா : | கடற்கரைக்குப் பக்கத்தில இருக்கிற விளையாட்டுத் திடல்ல நடக்குது. |
வேந்தன் : | அப்பா, நா விளையாடப்போறேன், அதனால வரலேப்பா. |
முல்லை : | நானுந்தான் விளையாடப்போறேன், |
அம்மா : | அடடா, பிள்ளைகளா நல்லாக் கேட்டுக்குங்க. அங்கே வந்தீங்கனா பலவகையான உணவுகளைப் பாக்கலாம். |
வேந்தன் : | அப்படி என்ன உணவு இருக்கும்? |
அம்மா : | ஆப்பம், இடியாப்பம், பிட்டு, கொழுக்கட்டை, அடை, தோசை, பொங்கல், வடை, முறுக்கு………இன்னும் எத்தனையோ இருக்கு. |
முல்லை : | ஓ! இத்தனை உணவுகளா? எல்லா உணவையும் பார்க்கணும்போல இருக்கே? |
அம்மா : | பார்க்க மட்டுமா? உங்களுக்குப் பிடித்த உணவுகளை வாங்கியும் சாப்பிடலாம். |
வேந்தன் : | ஓ! நாங்க இப்பவே வர்றோம்பா. |
அப்பா : | மிக்க மகிழ்ச்சி. வாங்க, எல்லாரும் போலாம். |