| மகிழ்நன் : | எனக்குக் கண்ணு வலிக்குது டாக்டர். |
| டாக்டர் : | நீ எப்போதும் செல்போனில் கேம் விளையாடுகிறாயா? |
| மகிழ்நன் : | இம். இம். ஆமா டாக்டர். |
| டாக்டர் : | ஓ! அப்படியெனில் உனக்குக் கண்ணில் வலி மட்டுமில்ல, கண் பார்வையும் குறையும். |
| மகிழ்நன் : | இதை எப்படிச் சரி செய்யறது டாக்டர்? |
| டாக்டர் : | செல்போனில் விளையாடுவதைக் குறைத்துக்கொள். |
| மகிழ்நன் : | சரிங்க டாக்டர். |
| டாக்டர் : | பழங்கள், கேரட், கீரை சாப்பிடு. கண்ணுக்கு நல்லது. |
| மகிழ்நன் : | எப்போது எல்லாம் சாப்பிட வேண்டும்? |
| டாக்டர் : | நாள்தோறும் சாப்பிட வேண்டும். |
| மகிழ்நன் : | வேறு என்ன செய்ய வேண்டும்? |
| டாக்டர் : | இரவில் நன்கு தூங்கு. கண்களுக்கு ஓய்வு கிடைக்கும். |
| மகிழ்நன் : | எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்? |
| டாக்டர் : | எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும். |
| மகிழ்நன் : | அப்படியே செய்கிறேன், நன்றி டாக்டர். |