முதல் பருவம்

நிலை - 1

4.5 பாடி மகிழ்வோம்

பாடம் - 4

நத்தை பாடல்

நத்தையாரே! நத்தையாரே!

நத்தையாரே! நத்தையாரே!
அத்தை வீடு பயணமோ?
அத்தை வீடு போக முதுகில்
தண்ணீர்க் குடம் வேணுமோ?
அத்தையார்க்கு நீர் சுமக்கும்
நத்தையாரே! வாருங்கள்!
மெத்த வழியில் நீரும் சிந்தும்
மெல்ல மெல்லச் செல்லுங்கள்!

- அழ. வள்ளியப்பா