பாரதியின் பெற்றோருக்கு அன்று திருமணநாள். பெற்றோருக்கு வாழ்த்து கூறிய பாரதி, வேண்டுகோள் ஒன்றையும் வைத்தாள். அதாவது, சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவும் உடையும் தரவேண்டும் என விரும்பினாள். பெற்றோரும் ஒப்புக் கொண்டனர். அவள் விரும்பியபடி புத்தாடைகள் வழங்கினர். பாரதியும் பெற்றோருடன் சேர்ந்து, தன் கையாலேயே பலருக்கும் உணவளித்து மகிழ்ந்தாள். அன்றைய நிகழ்வு அனைவருக்கும் மனநிறைவைத் தந்தது.