முதல் பருவம்

நிலை - 1

5.5 பாடி மகிழ்வோம்

பாடம் - 5

அன்பு பாடல்

அன்பு

பட்டை போடப் போடத்தான்
பளபளக்கும் வைரமே
மெருகு கொடுக்கக் கொடுக்கத் தான்
மினுமினுக்கும் தங்கமே

அரும்பு மலர மலரத் தான்
அளிக்கும் மணத்தை மலருமே
அன்பு பெருகப் பெருகத் தான்
அமைதி அடையும் உலகமே

- அழ. வள்ளியப்பா