![]() |
![]() |
![]() |
![]() |
சுறாமீன் டிங்கோ மிகவும் வலிமை உடையதாக இருந்தது. அது, குட்டிமீன்களைத் தின்று உயிர் வாழ்ந்தது. அதனால், குட்டிமீன்கள் வருத்தம் அடைந்தன. அவை தமக்குள் பேசி, பிரச்சனையைத் தீர்க்க முடிவு செய்தன. அப்போது, அந்தக் கூட்டத்தில் இருந்த நீனோ என்னும் குட்டிமீன் முன்வந்தது. அது, டிங்கோவிற்குத் தக்க பாடம் புகட்டுவேன் என்று கூறியது. ஒருநாள் அந்தக் கடலில் மீனவர்கள் வலை வீசினர். இதுதான் சரியான நேரம் என்று நீனோ நினைத்தது. மீனவர்களின் வலையைப் “பெரிய வீடு” என டிங்கோவிடம் கூற முடிவு செய்தது. ஆகவே நீனோ, உடனே டிங்கோவிடம் சென்றது. அது டிங்கோவைப் பார்த்து, நீ மிகவும் பலசாலி அல்லவா! அதனால்தான் “உன் பிறந்த நாளுக்காகப் பெரிய வீட்டைப் பரிசாகத் தருகிறோம். வா, அந்த வீட்டைக் காட்டுகிறேன்.” என்று கூறியது. நீனோவின் புகழ்ச்சிக்கு டிங்கோ மயங்கியது. அது மீனவர் வலைக்குள் சிக்கிக்கொண்டது.