முதல் பருவம்

நிலை - 1

7.6 கேட்டுக் கருத்தறிதல்

பாடம் - 7

புத்தகம் படிப்போமா!

வளவனும் தாத்தாவும் புத்தகக் கடைக்குச் சென்றனர். அங்கே வளவன், ஹரிஸையும் ஹரிணியையும் சந்தித்தான். ஹரிணி ஹாரிபாட்டர், ஜங்கிள்புக் டைனோஸரஸ் புத்தகங்களை வாங்கினாள். தாத்தா, அவர்களிடம் “திருக்குறள் புத்தகங்களும் வாங்கலாமே“ என்றார். அவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “திருக்குறளில் நிறைய கருத்துகள் உள்ளன. ஒருமுறை படித்துப் பாருங்களேன்” என்றார் தாத்தா. அவர்கள், திருக்குறள் புத்தகத்தை ஆர்வத்துடன் கேட்டு வாங்கினர். வளவன் தாத்தாவைப் பெருமையுடன் பார்த்தான். அவர்கள் வீடு திரும்பினர்.