|
|
கவி : |
மாமா, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய்
இருக்கு. என்ன நடக்குது? |
மாமா : |
அதுவா, கவி! நம்ம ஊர்ல நாட்டுப்புறக் கலை விழா
நடக்குது. |
கவி : |
ஓ அப்படியா ! வாங்க மாமா பாப்போம். |
மாமா : |
ம்ம்…. போகலாமே!. |
கவி : |
அதோ பாருங்க, மாமா. கையில துணி வச்சு
ஆடுறாங்களே அது என்ன ஆட்டம்? |
மாமா : |
அதுதான் கவி ஒயிலாட்டம். |
கவி : |
ஓ… அழகா இருக்குல்ல. சரி, மாமா. அங்கே பாருங்க.
மயில் போல வேஷம் போட்டு ஆடுறாங்க. |
மாமா : |
அது மயிலாட்டம், கவி. |
கவி : |
ரொம்ப அழகாக இருக்குல்ல. |
மாமா : |
ஆமா. அதோ அங்க பாரு! அந்தப் பறை இசைக்கு
எவ்ளோ ஆர்வமா ஆடுறாங்க. |
கவி : |
அத கேட்கும்போது எனக்கும் ஆடத் தோணுது, மாமா. |
மாமா : |
ஆமாம் கவி! எனக்கும் அப்படியேதான் இருக்கு! |