முதல் பருவம்

நிலை - 1

10.6 கேட்டல் கருத்தறிதல்

பாடம் - 9

சிங்கமும் மானும்

சிங்கமும் மானும்

சிங்கத்துக்குக் காலில் அடிபட்டது. அதனால் நடக்க முடியவில்லை. அந்த வழியாக ஒரு மான்குட்டி வந்தது. அது சிங்கத்தைப் பார்த்து வருந்தியது. இதனைச் சிங்கம் கவனித்தது. அது மான்குட்டியை அருகே அழைத்தது. “நண்பா!, நீ வீரன். தீய எண்ணம் இல்லாதவன். இந்த வழியாகப் பல விலங்குகள் சென்றன. அவை என்னைப் பார்த்துக் கேலியாகப் பேசின. என் காயத்தைப் பார்த்துச் சிரித்தன“ என்று கூறியது. சிங்கத்தின் கவலையைப் புரிந்துகொண்ட மான், “அட! விடுங்கள் இப்போது ஓய்வு எடுங்கள். கால் குணம் ஆகட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்“ என்று ஆறுதல் கூறியது.