| ஆசிரியர் | : | இனியா, நீ எங்க வசிக்கிற? |
| மாணவர் | : | ப்ரீமாண்ட்ல. |
| ஆசிரியர் | : | ஓ…. ப்ரீமாண்ட்ல நிறைய கடைகள் இருக்கும்தானே? சரி. நீ விடுமுறை நாள்கள்ல எங்க போவ? |
| மாணவர் | : | பூங்கா, கடற்கரை, கடைகளுக்குப் போவோம். |
| ஆசிரியர் | : | அப்படியா? சரி. என்ன வாங்குவீங்க? |
| மாணவர் | : | அம்மா நிறைய வாங்குவாங்க. நான் பழங்கள், பொம்மை, தின்பண்டம், நூடுல்ஸ் எல்லாம் கேட்பேன். |
| ஆசிரியர் | : | அப்படியா? நிறைய பொம்மை இருக்குமே? |
| மாணவர் | : | ஆமாம். எல்லா பொம்மையும் வச்சு நல்லா விளையாடுவேன். |
| ஆசிரியர் | : | உனக்கு விளையாடுவது பிடிக்குமா? |
| மாணவர் | : | ஆமா. எனக்கு விளையாட ரொம்பப் பிடிக்கும். |
| ஆசிரியர் | : | ஏன் அப்படி? |
| மாணவர் | : | நண்பர்களோடு சேர்ந்தா நிறைய புதுப்புது விளையாட்டு விளையாடலாம் இல்லையா! அதான் எனக்கு விளையாடப் பிடிக்கும். |