இரண்டாம் பருவம்

அகரம்

சரியான சொல்லைப் பொருத்தவும்

பாடம் - 24

உலகிலேயே மிக உயரமானது ஏஞ்சல் அருவி (Angel Falls). இது வெனிசுலா நாட்டில் உள்ளது. அவென்டியூய் (Auyantepui) என்னும் மலையில் இருந்து விழுகிறது. இதன் ஒரு துளி நீர், தரையை அடைய 14 நிமிடம் ஆகிறது. அருவியிலிருந்து விழும் நீர்த்துளிகள், வீசும் காற்றினால், பெருமளவில் சாரலாகப் பறக்கின்றன. எஞ்சிய நீர்த்துளிகள் கெரெப் என்னும் ஆற்றில் விழுகின்றன. 1933ஆம் ஆண்டு அமெரிக்க விமானி ஜிம்மி ஏஞ்சல் என்பவர் தங்கத்தைத் தேடி மலைகளின்மேல் பறந்து சென்றார். அப்போது இந்த அருவியைக் கண்டார். அதன் பிறகே இது வெளி உலகிற்குத் தெரிய வந்தது. அதனால், அவரின் பெயரால் இது ஏஞ்சல் அருவி என அழைக்கப்படுகிறது.


ஜிம்மி:ஏஞ்சல்
14:நிமிடம்
1933
வெனிசுலா
ஏஞ்சல்

1. உலகிலேயே மிக உயரமான அருவி எது?
2. ஏஞ்சல் அருவி எந்த நாட்டில் உள்ளது?
3. ஏஞ்சல் அருவியைக் கண்டறிந்தவர் யார்?
4. ஏஞ்சல் அருவி எந்த ஆண்டு கண்டறியப்பட்டது?
5. ஏஞ்சல் அருவியிலிருந்து விழும் நீர் தரையை அடைய எத்தனை நிமிடங்கள் ஆகின்றது ?