இரண்டாம் பருவம்

அகரம்

கீழ்க்காணும் கதையைப் படித்து வினாக்களுக்கு விடை கூறுக.

பாடம் - 31

கடையெழு வள்ளல்களுள் ஒருவன் பேகன். பேகனின் ஊர் மலை சூழ்ந்த ஆவிநன்குடி. இது பொதினி என்றும் பழனி என்றும் அழைக்கப்படும். அவர் ஒருமுறை தேரில் செல்லும்போது, வழியில் மயில் ஒன்று குளிரால் நடுங்கியதைக் கண்டார். அதைக் கண்டு இரக்கப்பட்ட அவர், தான் அணிந்திருந்த போர்வையை அதன்மேல் போர்த்தினார். அன்றுமுதல் மக்கள் இன்றுவரை ‘மயிலுக்குப் போர்வை கொடுத்த வள்ளல் பேகன்’ என்று வாழ்த்தினர். பேகனைப் போல நாமும் பிறருக்காக வாழ்வோம்.

வினாக்கள் :

வள்ளல் பேகனின் ஊர் எது?  ஆவிநன்குடி
ஆவிநன்குடியின் வேறுபெயர் என்ன?   பழனி
பேகன் கண்ட பறவை எது?   மயில்
மயிலுக்குப் போர்வை கொடுத்த வள்ளல் யார்?   பேகன்