பிசிராந்தையார், பாண்டிய நாட்டைச் சேர்ந்த புலவர். கோப்பெருஞ்சோழன் சோழ நாட்டை ஆட்சி புரிந்த மன்னன். இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே நட்பு கொண்டனர். பிசிராந்தையார், இம்மன்னனைப் போற்றிப் பல பாடல்களைப் பாடியுள்ளார். ஒருசமயம், கோப்பெருஞ்சோழன் உலக வாழ்க்கையைத் துறந்து வடக்கிருந்து உயிர்விடத் துணிந்தார். அப்போது அவர், தம் அமைச்சரிடம், ”என் நண்பர் பிசிராந்தையார் என்னைக் காண வருவார்” என்று கூறினார். தம் நண்பர் வடக்கிருத்தலை அறிந்த பிசிராந்தையாரும் அவரைக் காண சோழ நாடு வந்தார். மன்னன் உயிர் நீத்த இடத்திலேயே தானும் வடக்கிருந்து உயிர் நீத்தார்.
வடக்கிருத்தல் என்பது வடக்குத் திசை நோக்கி, உண்ணா நோன்பிருந்து உயிர் விடுதல் ஆகும்.
1. பிசிராந்தையார் வாழ்ந்த நாடு பாண்டிய நாடு
|
2. பிசிராந்தையாருடன் நட்பு கொண்ட சோழ மன்னன்
கோப்பெருஞ்சோழன்
|
3. கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தபோது அமைச்சரிடம் என் நண்பர்
பிசிராந்தையார் என்னைக் காண வருவார்.
|
4. வடக்கிருத்தல் என்பது, வடக்குத் திசை நோக்கி, உண்ணா
நோன்பிருந்து உயிர் விடுதல் ஆகும்.
|
5. சோழ மன்னன் வடக்கிருத்தலை அறிந்து அவரைக் காண வந்த
புலவர் பிசிராந்தையார்.
|