இகரம்
(முதல் பருவம்)
ஆடி மாதம். விடியும் பொழுதில் முதியவர் ஒருவர் ஆற்றங்கரைக்குச் சென்றார். அங்கு, ஓர் ஓரமாக மறைந்து நின்றார். அந்த நேரத்தில் சிலர் அங்கு வந்தனர். அவர்கள் தம் கையிலிருந்த பனை ஓலையால் செய்யப்பட்ட ஏடுகளை வீசிவிட்டுச் சென்றனர். முதியவர், அவர்கள் அறியாதவாறு, ஆற்றுக்குள் இறங்கினார். மிதந்து வந்த அந்த ஏடுகளை மெதுவாக எடுத்தார். அவர் மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது. அவற்றில் தமிழ்ப் பாடல்களும் உரைகளும் இருந்தன. இவ்வாறாகப் பல இடங்களிலும் அலைந்து திரிந்து ஓலைச்சுவடிகளைத் தேடியெடுத்தார். அவற்றிலுள்ள பாடல்களையும் உரைகளையும் நூல்களாக அச்சிட்டார். தமிழுக்குப் பெருமை சேர்த்தார். அவர்தாம் ‘தமிழ்த்தாத்தா‘ உ.வே.சாமிநாதர் ஆவார்.
ஓலைச்சுவடிகள் | - | பனை ஓலை ஏடுகள் | |
முதியவர் | - | வயதானவர் | |
உ.வே. சாமிநாதர்
பனை ஓலை
தமிழ்ப் பாடல்களும், உரைகளும்
தமிழ்த்தாத்தா