இகரம்
(முதல் பருவம்)
பேரரசர் ஃபிலிப், புதிதாக வாங்கப்பட்ட குதிரைகளைப் பார்வையிட்டார். அவற்றுள் ஒரு குதிரை மட்டும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டது. அக்குதிரை யாரையும் அருகில் நெருங்கவிடவில்லை. அதனை அடக்கமுடியாமல் அனைவரும் திணறினர். அப்போது, இதனைப் பார்த்துக்கொண்டிருந்த இளவரசர் அலெக்ஸாண்டர், தாம் குதிரையை அடக்குவதாகத் தெரிவித்தார். பேரரசரும் ஏற்றுக்கொண்டார். அலெக்ஸாண்டர், அக்குதிரையை வேறு இடத்திற்குக் கொண்டு சென்றார். இப்போது, அதன்மீது அவர் ஏறி அமர்ந்தபோதும் குதிரை ஒன்றும் செய்யவில்லை. பார்த்துக் கொண்டிருந்த எல்லாரும் கைகளைத் தட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். குதிரை எப்படி இவ்வளவு அமைதியாக நடந்துகொண்டது எனப் பேரரசருக்கும் வியப்பு ஏற்பட்டது. அதுபற்றி அலெக்ஸாண்டரிடம் கேட்டார். குதிரை தன் நிழலைப் பார்த்துத் தானே மிரண்டது. அதனை வேறு இடத்தில் நிற்க வைத்ததும் அதன் முரட்டுதனம் அகன்றது என அலெக்ஸாண்டர் கூறினார். பேரரசர் ஃபிலிப், அலெக்ஸாண்டரின் அறிவுக்கூர்மையைக் கண்டு வியந்தார். அவருக்குக் குதிரையைப் பரிசாக அளித்து மகிழ்ந்தார்.
ஃபிலிப்
குதிரை தன் நிழலைப் பார்த்து மிரண்டு முரட்டுத்தனமாக நடந்துகொண்டது.
அலெக்ஸாண்டர்
இளவரசர் முரட்டுத்தனமாக நடந்துகொண்டக் குதிரையை வேறு இடத்தில் நிற்க வைத்து அடக்கினார்.
குதிரை
தமிழ்நாட்டில், பெண்களை மட்டுமே கொண்டு முதன்முதலில் நாடகக்குழுவை நடத்தியவர், பாலாமணி அம்மாள். இவரது குழுவில் எழுபது பெண்கள் இருந்தனர். நான்கு குதிரை பூட்டப்பட்ட சாரட் வண்டியில்தான் பாலாமணி அம்மாள் நாடகங்களுக்குச் செல்வார். இவரது நாடகங்களைப் பார்க்க வருபவர்களுக்காகத் தனியாக இரயில் வண்டிகள் இயக்கப்பட்டன. அந்த இரயில் வண்டிகளுக்கு, ‘பாலாமணி ஸ்பெஷல்’ எனப் பெயரிட்டிருந்தனர். |
![]() |