இகரம்
(முதல் பருவம்)
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.
(குறள்:731)
- திருவள்ளுவர்
(தள்ளா = குறையா: தக்கார் = தகுதியுடையவர்)
குறையாத விளைபொருளும் தகுதியுடைய அறிஞரும் கேடு இல்லாத செல்வத்தை உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நல்ல நாடாகும்.