இகரம்
(முதல் பருவம்)
![]() |
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ஆம் நாள் உலக மாற்றுத்திறனாளிகள் நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. 1992ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை இதற்கான தீர்மானத்தை நியூயார்க்கில் நிறைவேற்றியது. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்காக இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றிய புரிதலை மக்களிடம் ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாக உள்ளது. சமுதாயத்தின் எல்லா நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் பங்கினை எடுத்துச்சொல்லவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. |
டிசம்பர் 3ஆம் நாள்
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை
1992 ஆம் ஆண்டு
சமுதாயத்தின் எல்லா நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் பங்கினை எடுத்துச்சொல்லவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
பிரெய்லி எழுத்து முறை
பார்வையற்றோருக்கான எழுத்து முறையை உருவாக்கியவர் பிரெய்லி. அந்த எழுத்துமுறை அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. ஆறு புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு இது எழுதப்படுகிறது. அப்புள்ளிகளை விரல் நுனியால் தொட்டு எழுத்துகளை அறிந்துகொள்ளலாம். பார்வைத்திறன் குறைந்தவர்களுக்கான எளிதான எழுத்து முறை இது. பிரெய்லி பிறந்த ஜனவரி 4 ஆம் நாள் உலகப் பார்வையற்றோர் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. |
![]() |