இகரம்
(முதல் பருவம்)
யானைகளைக் காடுகளின் காவலன் என்பர். வனங்களை வளர்ப்பதில் யானைகளுக்குப் பெரும்பங்கு உண்டு. யானைகளுக்கு வியர்வைச் சுரப்பிகள் கிடையாது. யானைகளின் தோல் மிகவும் கடினமானவை. கால்கள், தூண் வடிவில் இருப்பதால் எல்லா இடத்திலும் நடக்கும் தன்மை உடையன. யானைகளுக்கு நினைவுத்திறன் மிகுதி என்பதால் அவை தங்களது இடம்பெயர்வு வழித்தடங்களை நினைவில் வைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. யானையைக் குறிப்பதற்குக் களிறு, வேழம், களபம் முதலான 170க்கும் மேற்பட்ட சொற்கள் உள்ளன. ‘யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’, ‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பன யானையைக் குறிக்கும் பழமொழிகளாகும். தமிழ்நாட்டில் யானைகள் முகாம், முதுமலை வனவிலங்குக் காப்பகத்தில் அமைந்துள்ளது.
யானை
யானைகளின் கால்கள் தூண் வடிவில் இருக்கும்
யானையைக் குறிப்பதற்குக் களிறு, வேழம், களபம் முதலான 170க்கும் மேற்பட்ட சொற்கள் உள்ளன.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்.
தமிழ்நாட்டில் யானைகள் முகாம் முதுமலை வனவிலங்கு காப்பகத்தில் அமைந்துள்ளது.