இகரம்
(முதல் பருவம்)
தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் பிறந்தவர் சுந்தர்பிச்சை. கரக்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி)-யில் பொறியியல் பட்டம் பயின்றார். பின்னர், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டம் பெற்றார். உலகப் புகழ்பெற்ற பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார். பள்ளிக் காலத்திலிருந்தே தொலைபேசி எண்களை நினைவில் வைத்திருப்பதில் சுந்தர்பிச்சைக்குத் தனித்திறன் இருந்துவந்தது. 2004ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் இணைந்தார். இவரது மேற்பார்வையின்கீழ் கூகுள் க்ரோம், ஆண்ட்ராய்ட் ஆகியவை உருவாக்கப்பட்டன. கூகுள் தேடல், விளம்பரம், கூகுள் மேப் மற்றும் யூ டியூப் உள்ளிட்ட தயாரிப்புகளிலும் சுந்தர்பிச்சையின் பங்களிப்பு முதன்மையானது. இதனால், 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமைச்செயல் அலுவலராக நியமிக்கப்பட்டார்.
சுந்தர்பிச்சை
மதுரை
சுந்தர்பிச்சை அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். பட்டம் பெற்றார்.
2004ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் இணைந்தார்.
தொலைபேசி எண்களை நினைவில் வைத்திருப்பதில் சுந்தர்பிச்சை தனித்திறன் கொண்டிருந்தார்.
காமராஜர் முதல்வராக இருந்தபொழுது மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை நடந்தது. ஐந்து இடத்திற்கு ஐம்பது மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இரண்டு நாள் ஆகியும் அதிகாரிகளால் மாணவர்களைத் தேர்வு செய்ய முடியவில்லை. இதனை அறிந்த காமராஜர் விண்ணப்பங்களைப் பார்த்து, இரண்டு மணித்துளிகளில் மாணவர்களைத் தேர்வு செய்தார். வியப்படைந்த அதிகாரிகள் எப்படி முடிந்தது எனக் கேட்டனர். அதற்குக் காமராஜர் ”வந்திருந்த விண்ணப்பங்களில் பெற்றோர் கையொப்பம் என இருந்த இடத்தில் கைரேகை வைத்திருந்த விண்ணப்பங்களைத் தேர்வு செய்தேன். படிக்காதவர்களின் பிள்ளைகள் மருத்துவம் படிக்கட்டுமே! என்றார்”. |
![]() |