இகரம்
(முதல் பருவம்)
இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. இவர் தம்முடைய 5வது வயதிலேயே சதுரங்கம் விளையாடத் தொடங்கினார். தமது 12ஆவது வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார். இதன் மூலம் உலகளவில் இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற 5ஆவது வீரர் என்ற சாதனையையும் படைத்தார் பிரக்ஞானந்தா. இவர், சதுரங்கப்போட்டியில் நார்வே நாட்டைச் சேர்ந்த உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திச் சாதனை படைத்தார். உலகின் முதல்நிலை வீரரை வீழ்த்திய முதல் இந்திய இளம்வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி. இவரும் சதுரங்க வீரர் ஆவார். |
![]() |
பிரக்ஞானந்தா
நார்வே
வைஷாலி
12 வயது
கிராண்ட் மாஸ்டர் பட்டம் மூலம் பிரக்ஞானந்தா உலகளவில் 5ஆவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.