இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 12
12.4 தெரிந்துகொள்வோம்

ல, ழ, ள ஒலிவேறுபாடு

சிலம்பம் ஒரு கலை
வயலில் களை பறித்தார்.
கூடைகள் செய்யக் கழை பயன்படுகிறது.
கடல் அலையில் விளையாடினான்.
பாம்பு அளையிலிருந்து வெளியே வந்தது.
அம்மா குழந்தையை அழைத்தார்.
எனக்கு முழங்காலில் வலி.
வளியால் மரங்கள் அசைந்தன.
இது நான் போகும் வழி.
கிளிக்குக் கூர்மையான அலகு உண்டு.
அளகு அடைகாக்கிறது.
வானுக்கு நிலவு அழகு.

பொருள் அறிவோம்

1. களை - தேவையற்ற செடிகள்
2. கழை - மூங்கில்
3. அளை - புற்று
4. அழை - கூப்பிடுதல்
5. வளி - காற்று
6. வழி - பாதை
7. அலகு - பறவையின் மூக்கு
8. அளகு - கோழி