இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 12
12.6 கேட்டல் கருத்தறிதல்

பாரி வள்ளல்

குறுநில மன்னர்களுள் ஒருவர் பாரி. இவர், பறம்பு மலையை ஆட்சி செய்தார். இம்மலை முந்நூறு ஊர்களைக் கொண்டது. இது, பிறம்பு மலை என்றாகி இப்பொழுது 'பிரான்மலை' என்று அழைக்கப்படுகிறது. பாரி பெரும்புகழ் பெறக்காரணம் அவரது கொடைத்தன்மையே. தம்மை நாடி வருபவருக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுத்தார்.

ஒருநாள், பாரி தம் தேரில் மலைப்பாதை வழியாகச் சென்றார். அங்கு முல்லைக்கொடி ஒன்றைக் கண்டார். அந்தக் கொடி படர்வதற்குக் கொம்பின்றி அசைந்தது. அவர், முல்லைக் கொடிக்காக மனம் இரங்கினார். உடனே அந்தக் கொடியைத் தம் தேரில் படருமாறு செய்தார். மனிதருக்கு மட்டுமின்றி அஃறிணைப் பொருள்களுக்கும் உதவினார். இதிலிருந்து, பாரியின் வள்ளல் தன்மையை அறியலாம்.

விடை காண்போம்

பாரி

முந்நூறு ஊர்

பாரி முல்லைக் கொடிக்காக மனம் இரங்கினார்.

பிரான்மலை

பாரி பெரும்புகழ் பெறக்காரணம், அவரது கொடைத்தன்மை.

தகவல் துளி

'இந்தியாவின் இரும்பு மனிதர்’. என்று அழைக்கப்பட்டவர் சர்தார் வல்லபாய் பட்டேல். அவர், ஒருமுறை வெளிநாட்டிற்குச் சென்றிருந்தார். அங்கு, ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்திலிருந்த ஒருவர் “உங்கள் கல்ச்சர் (Culture) என்ன?”, என்று அவரிடம் கேட்டார். அதற்கு, பட்டேல் “எங்கள் கல்ச்சர் அக்ரிகல்ச்சர் (Agriculture)“, என்று உடனே பதிலளித்தார். இதிலிருந்து, இந்தியர்கள் வேளாண்மைக்குக் கொடுத்துவரும் முதன்மையை அறியமுடிகிறது.
சர்தார் வல்லபாய் பட்டேல் (1875 - 1950)