இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 14
14.6 கேட்டல் கருத்தறிதல்

வள்ளைப் பாட்டு

இனியாவின் பிறந்தநாள் விழா

வள்ளைப் பாட்டு என்பது பெண்களால் பாடப்படும் ஒரு வகைப் பாட்டு. வள்ளை என்பது, உலக்கையைக் குறிக்கும். உரலில் தினையை இடிப்பதற்காக, உலக்கையைப் பயன்படுத்துவர். அப்போது, களைப்பு தெரியாமல் இருப்பதற்காகப் பாடல் பாடிக்கொண்டே செய்வர். இப்பாடலுக்கு உரல் பாட்டு, உலக்கைப் பாட்டு, அம்மானை, வள்ளை, பொற்சுண்ணம், வள்ளைக் கூத்து எனப் பல்வேறு பெயர்கள் உள்ளன. வயலில் விளைந்த நெல்லின் கதிரினை முறித்து, கரிய நிறமுடைய உலக்கையால் பச்சை அவல் இடித்துள்ளனர் எனச் சங்க இலக்கிய நூலான அகநானூறு குறிப்பிடுகிறது.

வினாக்கள்

வள்ளை என்பதன் பொருள் உலக்கை.

தினையை இடிக்கும் பெண்கள் களைப்பு தெரியாமல் இருக்க வள்ளைப் பாட்டு பாடுவார்கள்.

பெண்கள்

உரல் பாட்டு, உலக்கைப் பாட்டு, அம்மானை, வள்ளை, பொற்சுண்ணம், வள்ளைக் கூத்து என்பன வள்ளைப் பாட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள் ஆகும்.

அகநானூறு

தகவல் துளி

இசைத்தூண் என்பது, இசை எழுப்பும் வகையில் உருவாக்கப்பட்ட கல்தூணைக் குறிக்கும். இது கோவில் மண்டபங்களின் ஒரு பகுதியாக அமைக்கப்படுகிறது. இசைத்தூண்கள் தமிழ்நாட்டிலும் அயல் மாநிலங்களிலும் காணப்படுகின்றன. இவை தமிழர்களின் நுட்பமான கட்டடக் கலை நுட்பங்களுள் ஒன்று. தமிழ்நாட்டில், மதுரை, திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, கிருஷ்ணாபுரம், செண்பகராமநல்லூர், தென்காசி, திருக்குற்றாலம், சுசீந்திரம் போன்ற இடங்களில் இசைத்தூண்கள் உள்ளன.
இசைத்தூண்