இகரம்
(இரண்டாம் பருவம்)
பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன்
சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் – நல்லாய்!
மணலுள் மூழ்கி மறைந்து கிடக்கும்
நுணலும்தன் வாயால் கெடும்
(பாடல் – 184)
- முன்னுறை அரையனார்
(பேதை – அறிவில்லாதவர்; நுணல் – தவளை)
அழகிய பெண்ணே! நான் கூறுவதைக் கேள். மணலில் மறைந்து வாழும் தவளை, தான் எழுப்பும் ஒலியால் தன் மறைவிடத்தை எதிரிக்குக்காட்டி, அழிந்துவிடும். அதுபோல, அறிவில்லாதவர்கள் தம் வாயாலேயே தீங்கு தரும் சொற்களைப் பேசித் தமக்குத் தாமே துன்பத்தைத் தேடிக் கொள்வர்.