இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 22
22.6 கேட்டல் கருத்தறிதல்

கதை – அன்பு

ஆசிரியர் மாணவர்களுடன் காவிரி ஆற்றங்கரைக்குச் சுற்றுலா சென்றார். ஒரு குடுவையில் கூழாங்கற்களை நிரப்பிக்கொண்டு மாணவிகள் நின்றனர். அதனுள் வேறு எதுவும் இனி வைக்க முடியாது என்று தங்களுக்குள் கூறிக்கொண்டு இருந்தனர். அருகிலிருந்த ஆசிரியர், மாலதியை அழைத்துக் கீழிருந்த மணலை அள்ளிக் குடுவையில் போடச்சொன்னார். மணல் உள்ளே சென்றது எதுவுமே போட முடியாது என எண்ணியிருந்த மாணவிகள் திகைத்தனர். இதில் மேலும் என்ன சேர்க்கலாம் என்று ஆசிரியர் கேட்டார். இனி எதுவுமே சேர்க்க முடியாது என்று அனைவரும் கூறினர். ஆசிரியர் சிரித்துக்கொண்டே தம் கையிலிருந்த தண்ணீர்க் குடுவையை ரேவதியிடம் கொடுத்து ஊற்றச் சொன்னார். குடுவைதண்ணீரால் நிறைந்தது. மாணவிகள் எதுவும் சொல்ல முடியாமல் நின்றனர். அப்போது ஆசிரியர் பொருட்களால் வீட்டை நிறைக்கலாம். ஆனால் அன்பும், கருணையாலும் மட்டுமே வீட்டை முழுவதுமாக நிறைக்க முடியும் என்றார்.

வினாக்கள்

காவிரி ஆற்றங்கரைக்கு

மாணவிகள் குடுவையில் கூழாங்கற்களை நிரப்பிக் கொண்டிருந்தனர்.

ஆசிரியர் மாலதியிடம் மணலை அள்ளிக் குடுவையில் போடச்சொன்னார்.

ரேவதி

பொருள்களால் வீட்டை நிறைக்கலாம். ஆனால் அன்பாலும், கருணையாலும் மட்டுமே வீட்டை முழுவதுமாக நிறைக்க முடியும் என்ற நீதியை இக்கதை உணர்த்துகிறது.

தகவல் துளி

கற்பனை செய்வது நம் எல்லாருக்கும் பிடிக்கும். இதோ, இவருடைய கற்பனையைப் பாருங்கள். இவர் கண்ட கற்பனைகள் பலவும் பிற்காலத்தில் உண்மையாயின. அவற்றுள், நிலவில் மனிதன் கால் பதித்ததையும் ஆழ்கடலுக்கு அடியில் நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்ததையும் குறிப்பிடலாம். இவரது நூல்கள் கற்பனைக் கதையை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு நுழைவாயிலாக இருந்தன. ஆகையால் இவரை ”அறிவியல் புதினங்களின் தந்தை” என்று போற்றினர். இத்தகைய பெருமைக்கு உரியவர் யாரென்று தெரியுமா? அவர்தாம் பிரான்ஸ் நாட்டின் ஜூல்ஸ்வெர்ன்.
ஜூல்ஸ்வெர்ன்
(1828 – 1905)