இகரம்
(இரண்டாம் பருவம்)
- கபிலர்
(அளகு – பறவை; வள்ளை – ஒரு வகைப் பாடல்)
வீட்டுப் பறவைகள் வள்ளைப்பாட்டைக் கேட்டு உறங்கும் வளமையான நாட்டுக்கு அரசனே! புல்லின் நுனியில் இருக்கும் சிறு பனித்துளி, உயரமான பனைமரத்தின் உருவத்தைத் தன்னுள் அடக்கிக்காட்டும். அதுபோல, திருவள்ளுவரின் திருக்குறளானது, இரண்டே அடியில் உலக மக்கள் அனைவருக்கும் பயன்தரும் அரிய பல கருத்துகளை அடக்கியுள்ளது.