இகரம்
(இரண்டாம் பருவம்)
அமுதன் பிறருக்கு உதவி செய்வதில் வல்லவர். மிகவும் இரக்க குணம் கொண்டவர். ஒருநாள் அவர் வேலை தேடி நேர்முகத் தேர்வுக்காகச் சென்று கொண்டிருந்தார். அவர் சென்ற வழியில் மகிழுந்து (கார்) ஒன்று நின்று கொண்டிருந்தது. பெண்மணி ஒருத்தி, அதன் சக்கரத்தைக் கழற்ற முயற்சி செய்து கொண்டிருந்தாள். அந்த வழியாகச் சென்ற யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. ஆனால், அமுதன் ஓடிச்சென்று அவருக்கு உதவினார். “மிகவும் நன்றி!” என்று அந்தப் பெண்மணி கூறிவிட்டுச் சென்றாள். நேர்முகத் தேர்விற்கு நேரமாகிவிட்டதால், தனக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பே இல்லை என்று அமுதன் நினைத்தார். இருந்தாலும் நேர்முகத் தேர்விற்குச் சென்றார். அங்கு, அவன் யாருக்கு உதவி செய்தாரோ அந்தப் பெண் இருப்பதைப் பார்த்தார். அவர்தாம் அந்த நிறுவனத்தின் இயக்குநர் என்று அறிந்தார். அமுதனைப் பார்த்ததும், அப்பெண்மணி இருக்கையைவிட்டு எழுந்தாள். “பிறருக்கு உதவும் நல்ல உள்ளம் கொண்ட உங்களுக்கு இங்கே வேலை தருவதைப் பெருமையாகக் கருதுகிறேன்.“ என்று அவரைப் பாராட்டி வேலையும் அளித்தார்.
அமுதன் மிகவும் இரக்க குணம் கொண்டவர்.
ஒரு பெண்மணி
மகிழுந்தின்(காரின்) சக்கரத்தைக் கழற்ற முயன்ற பெண்ணுக்கு அமுதன் உதவியதால் நேர்முதக் தேர்விற்கு காலம்கடந்து சென்றான்.
அமுதன் உதவி செய்த அந்தப் பெண் தான் நிறுவனத்தின் இயக்குநர்.
பிறருக்கு உதவும் பண்பு, இரக்க குணம்
பன்னாட்டுச் சுழற்சங்கம், சமூக சேவையை நோக்கமாகக் கொண்டது. இது சமயம், நிறம், இனம், பால், அரசியல் சார்பற்ற அனைத்து மக்களுக்கும் பொதுவான ஓர் அமைப்பு ஆகும். இந்த அமைப்பில் உலகம் முழுவதும் 34,282 சங்கங்களும், 1.2 மில்லியன் உறுப்பினர்களும் உள்ளனர். பன்னாட்டுச் சுழற்சங்கத்தின் முதன்மைக் குறிக்கோள் "தன்னைவிட மேலானது சேவை" என்பதாகும். அதன் இரண்டாவது குறிக்கோள், "மிகச்சிறந்த இலாபம் என்பது சேவையே ஆகும்." என்பதாகும். |
![]() |