இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 24
24.8 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்.

(குறள் – 298)

- திருவள்ளுவர்

(அகம் – மனம்; வாய்மை – உண்மை)

பொருள் :

உடல் தூய்மை, நீரால் உண்டாகும். அதுபோல, மனத்தூய்மை உண்மை பேசுவதால் உண்டாகும்.