இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 25
25.6 கேட்டல் கருத்தறிதல்

திட மற்றும் திரவ உணவுகள்

நமது உடலை வளர்க்க உதவுவது உணவு. வாய்வழியாக உட்கொண்டு, உயிர் வாழத் துணையாக நிற்கும் பொருளையே உணவு என்கிறோம். உணவு உடலுக்கு ஆற்றலைத் தருகின்றது. உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. உறுப்புகள் தேய்ந்து அழிந்துவிடாமல் பாதுகாக்கிறது. உடல் நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது. நாம் இருவகை உணவுகளை உண்கிறோம். ஒன்று, திடஉணவு. மற்றொன்று, திரவ உணவு. காய்கள், பழங்கள், இறைச்சி, மீன் போன்றவை திடஉணவுகள். இளநீர், தேன், பால், போன்றவை திரவ உணவுகள்.

வினாக்கள்

நமது உடலை வளர்க்க உதவுவது உணவு

வாய்வழியாக உட்கொண்டு, உயிர் வாழத் துணையாக நிற்கும் பொருளையே உணவு என்கிறோம்.

உணவு உடலுக்கு ஆற்றலைத் தருகின்றது. உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. உறுப்புகள் தேய்ந்து அழிந்துவிடாமல் பாதுகாக்கிறது. உடல் நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

காய்கள், பழங்கள், இறைச்சி, மீன் போன்றவை திட உணவுகள்.

இளநீர், தேன், பால் போன்றவை திரவ உணவுகள்.

சுவைச்செய்தி

‘ஏழைகளின் பாதாம்’ என்று அழைக்கப்படுவது நிலக்கடலை. இந்நிலக்கடலையைக் காந்தியடிகள் விரும்பி, உண்டார். இதன் விலை குறைவு. சாதாரண மக்களும் வாங்கி உண்ணலாம். இது சத்துகள் நிறைந்த உணவு வகைகளுள் ஒன்று. நிலக்கடலையில் அதிக அளவு புரதம் இருப்பதால், காந்தியடிகள் தம் வாழ்நாள் முழுவதும் அதனை உணவாக எடுத்துக் கொண்டார்.