இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 27
27.8 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

(குறள் 236)

- திருவள்ளுவர்

(தோன்றின் – பிறத்தல்; அஃதிலார் – அவ்வாறு இல்லாதவர்)

பொருள் :

ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும். அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமல் இருப்பதே நல்லது.