இகரம்
(இரண்டாம் பருவம்)
கடற்கரை மணலில் தன் தங்கையுடன் விளையாடிக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன். அங்கு ஒரு பொம்மைக் கடை இருந்தது. அவன் தங்கை பொம்மைக் கடைக்குச் செல்ல வேண்டும் என்றாள். சிறுவன் தன் தங்கையுடன் கடைக்குச் சென்றான். தங்கை கடையில் இருந்த பொம்மை ஒன்று வேண்டும் என்றாள். அவள் கேட்ட பொம்மையைக் கையிலெடுத்தான் சிறுவன். கடைக்காரரிடம் தன்னிடம் இருந்த சிப்பிகளைக் கொடுத்தான். கடைக்காரர் சிரித்துக்கொண்டே, இந்தப் பொம்மைக்கு நான்கு சிப்பி போதும் என்றார். சிறுவனும் அவன் தங்கையும் பொம்மையைப் பெற்றுக் கொண்டனர். மகிழ்ச்சியோடு சென்றனர். கடையிலிருந்த வேலைக்காரன், ஒன்றுக்கும் உதவாத சிப்பிகளை விலையாகப் பெற்றுக்கொள்ளக் காரணம் என்ன என்று கேட்டான். அதற்குக் கடைக்காரர், பொம்மை வாங்குவதற்குப் பணம் தேவை என்று அந்தச் சிறுவனுக்குத் தெரியவில்லை. ஆனால், இந்த மிகச் சிறிய வயதில் தன் தங்கை கேட்ட பொருளைக் கொடுக்க நினைக்கிறான். அந்த அன்பிற்கு விலை ஏதும் இல்லை என்று கூறினார்.
சிறுவனும் அவன் தங்கையும் கடற்கரை மணலில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
சிறுவனின் தங்கை பொம்மை வேண்டுமென்று கேட்டாள்.
சிறுவன் தன்னிடம் இருந்த சிப்பிகளைக் கொடுத்து பொம்மை வாங்கினான்.
வேலைக்காரன், ஒன்றுக்கும் உதவாத சிப்பிகளை விலையாகப் பெற்றுக்கொள்ளக் காரணம் என்ன என்று கேட்டான்.
அன்பு.
நகைச்சுவையை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. இந்திய நாட்டின் தந்தை எனப் போற்றப்படும் காந்தியடிகள், நகைச்சுவைப்பற்றிக் கூறிய கருத்து, நம் சிந்தனையைத் தூண்டுகிறது. “நகைச்சுவை உணர்வு மட்டும் என்னிடம் இல்லை எனில், நான் எப்போதோ இவ்வுலகைவிட்டுச் சென்றிருப்பேன்“ என்று அவர் கூறியுள்ளார்.