இகரம்
(இரண்டாம் பருவம்)
கோவிட் -19 பெருந்தொற்றுக் காலத்தில், உலகமே முடங்கியது. மக்கள் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் துன்பப்பட்டனர். அந்நிலையில், மனிதநேயம் மிக்கவர்கள், மற்றவர்களுக்கு உதவினர். தாம் ஈட்டிய பெருஞ்செல்வத்தைத் துன்பப்படுபவர்களுக்கு மனம் உவந்து அளித்தனர். அத்தகைய பண்பாளர்களுக்கு ஐக்கிய நாடுகள் அவை உயரிய விருது வழங்கிச் சிறப்பித்தது. இந்தியாவிலிருந்து நடிகர் சோனுசூட் சிறப்பு மனிதநேய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டார். இவர், கொரோனா காலத்தில் பலருக்கும் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தார். அயலகம் சென்று படித்துக் கொண்டிருந்த மாணவர்கள், பாதுகாப்புடன் திரும்பி வருவதற்கு உதவினார். பொதுமுடக்கம் ஏற்பட்டபோது, போக்குவரத்து இல்லாததால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் தம் சொந்த ஊர் திரும்ப முடியாமல் துன்பப்பட்டனர். அவர்கள் திரும்பிச் செல்வதற்கும் ஏற்பாடு செய்தார். அவருக்கு விருது வழங்கிச் சிறப்பித்தபோது, ‘என் நாட்டு மக்களுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்கிறேன்‘ என்று அவர் கூறியமை குறிப்பிடத்தக்கதாகும்.
கோவிட்- 19
மனித நேய விருது
திரு. சோனுசூட்
திரு. சோனுசூட், கொரோனா காலத்தில் அயலகம் சென்று படித்துக் கொண்டிருந்த மாணவர்கள், பாதுகாப்புடன் திரும்பி வருவதற்கு உதவினார். பொதுமுடக்கம் ஏற்பட்டபோது, போக்குவரத்து இல்லாததால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் தம் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்வதற்கு ஏற்பாடு செய்தார்.
விருது பெற்றபின், திரு. சோனுசூட் ‘என் நாட்டு மக்களுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்கிறேன்‘ என்று கூறினார்.
இந்திய குழந்தைகள் நல அமைப்பு ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் தேசிய வீரதீர விருதுக்கான சிறுவர், சிறுமிகளைத் தேர்வு செய்கிறது. 2019ஆம் ஆண்டிற்கான இவ்விருது 10 சிறுமிகள், 12 சிறுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இக்கட்டான சூழலில் பல்வேறு உயிர்களைக் காப்பாற்றியவர்கள் இவ்விருதுகளைப் பெறுகின்றனர். இதன் மூலம் வீரதீரச் செயலால் மற்றவர்களுக்கு உதவும் பண்பு வளர்கிறது. இவ்விருது பெற்றவர்களுள் ஒருவர், கேரளாவைச் சேர்ந்த ஆதித்யா. இவர், 2019 மே மாதம் நேபாளத்தில் மலைப்பகுதியிலிருந்து இந்தியாவிற்குப் பேருந்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது எரிபொருள் கசிவு ஏற்பட்டதை உணர்ந்து கூறினார். சற்று நேரத்தில். பேருந்தில் தீப்பற்றத் தொடங்கியது. சுத்தியலின் உதவியால் கண்ணாடி உடைக்கப்பட்டு 40 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அவர்களைக் காப்பாற்றியதற்காகத் ‘தேசிய வீரதீர விருது‘ ஆதித்யாவிற்கு வழங்கப்பட்டது. |
![]() |