இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 30
30.8 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்

(குறள் – 93)

- திருவள்ளுவர்

(இனிது – இன்பம் தருவது; நோக்கி – பார்த்தல்; இன்சொல் – இனிமையான சொல்)

பொருள் :

முகத்தால் விரும்பி இனிமையுடன் நோக்கி உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.