உகரம்
(முதல் பருவம்)
கோடைக்காலம், கடும் வறட்சி நிலவியது. மாவீரன் அலெக்ஸாண்டர் தன் வீரர்களுடன் பயணம் செய்துகொண்டிருந்தார். அனைவரும் தாகத்தால் தவித்தனர். அப்போது, படைவீரர் ஒருவர் சிறிதளவு தண்ணீரை, தேடிக் கொண்டுவந்தார். அதனை அலெக்ஸாண்டரிடம் கொடுத்தார். அதற்கு அலெக்ஸாண்டர் ”நீங்கள் என் உயிரைவிட மேலானவர்கள். நீங்கள் தாகத்தால் வருந்தும்போது நான் மட்டும் எப்படிக் குடிப்பேன்?” என்றார்.
உடனே, ”எங்கள் பிள்ளைகளுக்காக” என்றார் ஒரு வீரர். ”என்ன, உங்கள் பிள்ளைகளுக்காகவா?” என்றார் அலெக்ஸாண்டர். ”ஆம் மன்னா! நீங்கள் நன்றாக இருந்தால் நாடு நன்றாக இருக்கும் அல்லவா?” என்றார் வீரர். அதைக் கேட்ட அலெக்ஸாண்டர் மனம் நெகிழ்ந்தார். “உங்களுக்கு உங்கள் அரசரின் உயிர் முக்கியம். எனக்கு என் வீரர்களாகிய உங்கள் உயிர் மிக முக்கியம். நான் மட்டும் எப்படித் தண்ணீரைக் குடிப்பேன்!“ என்று கூறித் தண்ணீரைக் குடிக்க மறுத்துவிட்டார்.
மாவீரன் அலெக்ஸாண்டருடன் பயணம் செய்துகொண்டிருந்த வீரர்கள் அனைவரும் தாகத்தால் தவித்தனர். அப்போது, படைவீரர் ஒருவர் சிறிதளவு தண்ணீரைத் தேடிக் கொண்டுவந்தார்.
மன்னன் நன்றாக இருந்தால் நாடு நன்றாக இருக்கும். எனவே எங்கள் பிள்ளைகளுக்காக நீங்கள் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று படைவீரர் அலெக்ஸாண்டரிடம் வேண்டிக்கொண்டார்.
அலெக்ஸாண்டர் “நீங்கள் என் உயிரைவிட மேலானவர்கள். நீங்கள் தாகத்தால் வருந்தும்போது நான் மட்டும் எப்படிக் குடிப்பேன்?” என்று குடிக்க மறுத்துவிட்டார்.
அலெக்ஸாண்டர் ”உங்களுக்கு உங்கள் அரசரின் உயிர் முக்கியம். எனக்கு என் வீரர்களாகிய உங்கள் உயிர் மிக முக்கியம்” என்றார். இதன் மூலம் படைவீரர்களையும் தம் உயிர்போல் கருதிய அவருடைய தலைமைப் பண்பு பாராட்டத்தக்கது.