உகரம்
(முதல் பருவம்)
வகுப்பறையில், ரியா ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். அதனைக் கவனித்தார் ஆசிரியர். “ரியா என்ன ஆச்சு? ஏதோ கவலையில் இருப்பதுபோல் தெரிகிறதே!” என்று கேட்டார்.
ரியா சற்றுத் தயக்கத்துடன் ஆசிரியரைப் பார்த்தாள். “தயங்காதே ரியா! எதுவாக இருந்தாலும் கூறு” என்றார் ஆசிரியர். “ஐயா! நம் பள்ளியின் வாசல் அருகே முதியவர் ஒருவர், சாலையைக் கடக்க முடியாமல் நின்றிருந்தார். பள்ளிக்கு நேரமானதால், நான் அவருக்கு உதவி செய்யாமல் வந்துவிட்டேன்” என்று தன் செயலை நினைத்து வருந்தினாள்.
“கவலைப்படதே ரியா! அந்த முதியவரை நானும் பார்த்தேன். அவருக்கு உதவி செய்துவிட்டுத்தான் வந்தேன்” என்றார் ஆசிரியர். அதைக் கேட்டதும் ரியா நிம்மதியடைந்தாள்; ஆசிரியருக்கு நன்றி கூறினாள். ஆசிரியர் அவளது உதவும் குணத்தைப் பாராட்டினார்.
ரியாவின் சிந்தனைக்குக் காரணம் , பள்ளிக்கு நேரமானதால் முதியவருக்கு உதவ முடியவில்லை என்ற வருத்தம் .
முதியவர் பள்ளியின் வாசல் அருகே சாலையைக் கடக்க முடியாமல் நின்றிருந்தார்.
ஆசிரியர்
ரியா நிம்மதி அடையக் காரணம் ‘ஆசிரியர் முதியவருக்கு உதவிய செயல்’ ஆகும்.
பிறருக்கு உதவும் குணத்தைப் பார்த்து ஆசிரியர் ரியாவைப் பாராட்டினார்.