உகரம்
(முதல் பருவம்)
|
தமிழர்கள், இயற்கை உணவு முறையினைப் பின்பற்றினர். இயற்கையோடு இயைந்த பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்தனர். அதனால், உடல் நலத்தையும் உளநலத்தையும் போற்றிப் பாதுகாத்தனர். அவர்களுக்கு உணவே மருந்தாக அமைந்தது. பழங்காலம்முதல் உணவை மருத்துவ முறையிலே சமைக்கின்றனர். சமையலில் இஞ்சி, மஞ்சள், மிளகு, சீரகம், கொத்துமல்லி, பூண்டு முதலியவற்றிற்குக் குறிப்பிடத்தக்க முக்கியப் பங்கு உண்டு. இவை ஒவ்வொன்றும் மருத்துவக் குணம் கொண்டவை. தமிழர்கள் தம் உணவில் அறுசுவைக்கும் முதன்மை அளித்தனர். அவருடைய பதவி ஏற்பு விழாவினை அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர். ஒவ்வொரு நாட்டிலிருந்தும் முக்கியத் தலைவர்கள் வந்திருந்தனர். அறிவியல் அறிஞர்கள், தத்துவ மேதைகள் என அனைவரும் அந்த இடத்தில் மாமனிதருக்காகக் காத்திருந்தனர். பல நாடுகளின் முன்னணி ஊடகங்கள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யத் தயாராக இருந்தன. அம்மாமனிதர் மேடை ஏறினார். பலரின் மகிழ்ச்சிக் குரல் ஒலிக்க, மாமனிதர் பதவி ஏற்றுக் கொண்டார். அந்த நேரத்தில் அவர் அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க உறுதி ஏற்றுக் கொண்டார். மக்களின் வாழ்நிலையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று எண்ணினார். மக்களுக்கு அனைத்து உரிமைகளும் எந்த இடையீடுமின்றிக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் விரும்பினார். வளர்ந்த நாடுகளுக்கு இணையாகத் தம்முடைய நாட்டினை உயர்த்த வேண்டும் என்றும் உறுதி ஏற்றார். இப்பணிகளுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும் என்ற மன உறுதியுடன் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றார். |
| 1. | வானூர்திகள் | - | விமானங்கள் | ||
| 2. | ஊடகங்கள் | - | நாளிதழ் மற்றும் மின்னணுத் தொடர்புகள் | ||
| 3. | மாமனிதர் | - | சிறந்த மனிதர் | ||
| 4. | இடையீடு | - | தடை |
தன்னம்பிக்கை, அர்ப்பணிப்பு
நெல்சன் மண்டேலா, தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். குத்துச்சண்டை வீரரான அவருக்குப் பொதுவெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் அறைக்குள்ளேயே ஓட்டப்பயிற்சி செய்தார். சிறையில் கல் உடைத்தார். சுண்ணாம்புக்கல் வெட்டும் வேலையைச் செய்தார். சாலை போடும் வேலை செய்தார். கடற்பாசிகளைச் சேகரித்தார். இவை போன்ற கடுமையான வேலைகளை செய்து வந்தார்.
நெல்சன் மண்டேலா அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க உறுதி ஏற்றுக் கொண்டார். மக்களின் வாழ்நிலையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று எண்ணினார். மக்களுக்கு அனைத்து உரிமைகளும் எந்த இடையீடுமின்றிக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் விரும்பினார். வளர்ந்த நாடுகளுக்கு இணையாகத் தம்முடைய நாட்டினை உயர்த்த வேண்டும் என்றும் உறுதி ஏற்றார். இப்பணிகளுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும் என்ற மன உறுதியுடன் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றார்.