உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 6
6.5 கேட்டல் கருத்தறிதல்

நன்றே செய்வோம்

தாமஸ் கடற்கரைக்குச் சென்றார். அப்போது இளைஞன் ஒருவன், கரை ஒதுங்கிய மீன்களைக் கடலுக்குள் வீசிக்கொண்டு இருந்தான். அதைப் பார்த்த தாமஸ், “தம்பி இந்தக் கடலில் ஒதுங்கும் மீன்களை நீ காப்பாற்றுகிறாய். ஆனால், உலகிலுள்ள மற்றக் கடற்கரைகளில் கரை ஒதுங்கும் மீன்களை யார் காப்பாற்றுவார்?” என்றார். அதற்கு அந்த இளைஞன், “எத்தனையோ மீன்கள் கரை ஒதுங்கி இறந்து போகலாம். ஆனால், நான் தூக்கி வீசிய இந்த மீன்கள் பிழைத்துக் கொள்ளும் அல்லவா!” என்றான். ஆம்; நாம் ஒவ்வொருவரும் செய்யும் நல்ல செயல்களால் மட்டுமே, மாற்றம் நிகழும் என்பதைத் தாமஸ் உணர்ந்தார்.

வினாக்கள்

தாமஸ் கடற்கரைக்குச் சென்றார்.

இளைஞன், கரை ஒதுங்கிய மீன்களைக் கடலுக்குள் வீசிக்கொண்டு இருந்தான்.

தாமஸ், இளைஞனிடம் இந்தக் கடலில் ஒதுங்கும் மீன்களை நீ காப்பாற்றுகிறாய். ஆனால், உலகிலுள்ள மற்ற கடற்கரைகளில் கரை ஒதுங்கும் மீன்களை யார் காப்பாற்றுவார்? எனக் கேட்டார்.

தாமஸிடம், இளைஞன் ”எத்தனையோ மீன்கள் கரை ஒதுங்கி இறந்து போகலாம். ஆனால், நான் தூக்கி வீசிய இந்த மீன்கள் பிழைத்துக் கொள்ளும் அல்லவா!” என்று கூறினான்.

ஒவ்வொருவரும் செய்யும் நல்ல செயல்களால் மட்டுமே, மாற்றம் நிகழும் என்பதைத் தாமஸ் உணர்ந்துகொண்டார்.