உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
8.5 கேட்டல் கருத்தறிதல்

போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து

வேலனும் முத்துவும் மாமா வீட்டுக்கு நடந்து சென்றனர். அவர்களுக்குத் தாகம் எடுத்தது. சாலை ஓரமாக இருந்த வீட்டில் தண்ணீர் கேட்டனர். அந்த வீட்டில் இருந்த பாட்டி, ”தண்ணீர் இல்லை; ஆனால் கொஞ்சமாக மோர் இருக்கிறது; அதனைத் தருகிறேன்” என்றார். ஒரு குவளையில் பாட்டி கொடுத்த மோரைப் பார்த்த வேலன், ”இது மிகவும் குறைவாக உள்ளதே. இது எங்கள் தாகத்தை எப்படித் தீர்க்கும்?” என்றான். ஆனால் முத்து, “குவளையில் பாதியளவுக்குமேல் மோர் உள்ளதே! அதைக் குடித்துக் கொஞ்சமாவது தாகத்தைத் தணித்துக்கொள்ளலாம்” என்றான். இதனைக் கேட்ட பாட்டி, “நல்லது தம்பி! இப்படித்தான் இருப்பதைக் கொண்டு வாழப் பழகிக் கொள்ள வேண்டும்” என்று கூறி முத்துவைப் பாராட்டினார்.

வினாக்கள்

வேலனும் முத்துவும் மாமா வீட்டுக்குச் சென்றனர்.

மோர்

பாட்டி மோரை ஒரு குவளையில் கொடுத்தார்.

மோரைப் பார்த்த வேலன், “இது மிகவும் குறைவாக உள்ளதே. இது எங்கள் தாகத்தை எப்படித் தீர்க்கும்?” என்றான்.

முத்து வேலனிடம், குவளையில் பாதியளவுக்குமேல் உள்ள மோரைக் குடித்துக் கொஞ்சமாவது தாகத்தைத் தணித்துக்கொள்ளலாம் என்றான். இதனைக் கேட்ட பாட்டி, இப்படித்தான் இருப்பதைக் கொண்டு வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று கூறி முத்துவைப் பாராட்டினார்.