உகரம்
(முதல் பருவம்)
இந்தியாவின் குடியரசுத்தலைவராக இருந்தவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம். அவரிடம், ”உங்களுக்குப் பிடித்த புத்தகம் எது?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு அவர், ”வாழ்க்கைக்கு வழிகாட்டும் சிறந்த புத்தகமாக நான் கருதுவது திருக்குறள்தான்.” இதிலுள்ள 1330 குறளையும் நான் பலமுறைப் படித்திருக்கிறேன். அவற்றுள் என் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் அச்சாணியாகவும் இருந்த குறள்,
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு (595 )
என்றார். அதாவது, “நீர்ப் பூக்களது தண்டின் நீளம், நீர் மட்டத்தின் அளவாக அமையும். அதுபோல, மனிதருடைய ஊக்கத்தின் அளவாக அவர்தம் உயர்வு அமையும்.” என்பது இக்குறளின் பொருளாகும்.
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
உங்களுக்குப் பிடித்த புத்தகம் எது?
திருக்குறள்
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு
1330