உகரம்
(முதல் பருவம்)
சிங்கம் ஒன்று சில நாள்களாக குகைக்குள்ளேயே படுத்திருந்தது. குகையின் மூலையில் ஒரு சிலந்தி, வலை பின்னியிருந்தது. அது, சிங்கத்தைப் பார்த்து, ‘சிங்க ராஜாவே! நீங்கள் இரை தேடச் செல்லவில்லையா?‘ எனக் கேட்டது. ‘சிலந்தியே! நானும் உன்னைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். நீ இருக்கும் இடத்திலிருந்தே இரையைப் பிடித்து விழுங்குகிறாய்! நானும் உன்னைப் போலவே இருக்கும் இடத்திலேயே இரையைப் பிடித்து உண்ணலாம் என நினைத்துப் படுத்திருக்கிறேன்‘ என்றது சிங்கம். இதனைக் கேட்ட சிலந்தி சிரித்தது. சிங்கம் ‘ஏன் சிரிக்கிறாய்?‘ என்றது.
‘உங்கள் அறியாமையை நினைத்துதான் சிரிக்கிறேன். என் கடின உழைப்பினாலேயே வலை உருவாகிறது. அது ஒட்டும் தன்மையுடன் உள்ளது. அதில் பூச்சிகள் ஒட்டிக்கொள்கின்றன. அதனால்தான், எனக்கு உணவு கிடைக்கிறது. ஆனால் நீங்கள், எந்த முயற்சியும் செய்யாமல், உங்களுக்கு உணவு எப்படிக் கிடைக்கும்?‘ என்று கேட்டது சிலந்தி. சிலந்தியின் உழைப்பை உணர்ந்தது சிங்கம். தானும் வேட்டையாடி உண்ண வேண்டும் என்று குகையைவிட்டுப் புறப்பட்டது.
சிங்கம் குகைக்குள் இருந்தது.
சிலந்தி குகையின் மூலையில் வலை பின்னியிருந்தது.
சிங்கம், சிலந்தியிடம் நீ இருக்கும் இடத்திலிருந்தே இரையைப் பிடித்து விழுங்குகிறாய். நானும் உன்னைப் போலவே இருக்கும் இடத்திலேயே இரையைப் பிடித்து உண்ணலாம் என நினைத்துப் படுத்திருக்கிறேன் என்றது.
சிலந்தி வலை ஒட்டும் தன்மை உடையது.
உழைப்பு / சிங்கம் சிலந்தியிடமிருந்து உழைத்து உண்ணவேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டது.